July 11, 2018 -
அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் வைத்து பாதுகாப்பற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டதில் உயிரிழந்துள்ளான்.
கிறிஸ்டோபர் வில்லியம் என்ற அந்த சிறுவனின் பெற்றோர் அந்த சூடு இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் இருந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவனின் தந்தைக்கு சொந்தமான 9எம்.எம் கை துப்பாக்கி ஒன்று சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் சிறுவனின் பெற்றோர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுவது குறித்து உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மற்றொரு இரண்டு வயது சிறுவன் ஒருவன் கடந்த மே மாதத்தில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததற்கு அவனது தந்தை மீது ஹோஸ்டன் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கலிபோர்னியாவில் இடம்பெற்ற இதேபோன்ற சம்பவத்தில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
0 comments:
Post a Comment