July 11.2018
கட்டாரில் உள்ள இலங்கை பாடசாலை நிர்வாகத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டோஹாவில் உள்ள ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலைக்கு முன்னாள் அதிபர் குமுது பொன்சேகாவிற்கு பதிலாக ரொஷான் சஞ்சேய் பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பாடசாலைக்கான புதிய கட்டண நிர்மாண பணிகள் 3 மாத காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார்.
கட்டார் அரசாங்கம் இலங்கை சமூகத்தின் கல்வியை கருத்திற் கொண்டு துமாமா சந்தியில் 10,000 சதுர மீட்டர் காணியொன்றை வழங்கியுள்ளது.
இந்த நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2020ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு சமீபத்தில் புதிய தலைவரை இந்த பாடசாலைக்கு நியமித்தது.
குறித்த பாடசாலையில் தலைவராக ரொஷான் சஞ்சேய் பாலசூரிய 4ம் திகதி நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பின் மூலம் இந்த நியமனம் இடம்பெற்றது.
தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நியமனம் இடம் பெற்றதாக இந்த தூதுவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை சமூக நலனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய தலைவரின் நியமனத்தை அடுத்து இந்த பாடசாலை தூதரகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டாரில் கணிசமான இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், குறித்த பாடசாலையினால் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment