AUGUST 1, 2018
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஹெலபொஜுன் உணவகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த உணவகங்களை அமைப்பதற்கான நடவடிக்கையினை விவசாய அமைச்சு நாடாளவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தின் வாகரை மற்றும் மொரவெவ போன்ற பகுதிகளில் ஹெலபொஜுன் உணவங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உணவங்களை அமைப்பதற்காக 70 இலட்சம் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், நஞ்சுத்தன்மையற்ற உள்நாட்டு உணவுகளை சலுகை விலையில் இந்த உணவகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கிழக்கு மாகாண மக்கள் பயனடைவதுடன், மகிழ்ச்சியடைவார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






0 comments:
Post a Comment