Friday, August 24, 2018

கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல்


, 24 AUGUST 2018 -

டீ.ஏ ராஜபக்ஸ அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு  நிதி மோசடியின் கீழ்  சட்டமா அதிபரால் விசேட மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தங்காலை – வீரக்கெட்டிய டீ.ஏ.ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது, அரசின் 81 மில்லியன் ரூபா நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஸ தவிர்ந்த சந்தேகநபர்களாக பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, உதுலாவதீ கமலதாச, கேமிந்த ஆட்டிகல, சமன் குமார கலப்பதி, தேவக மகிந்த சாலிய, ஶ்ரீமதி மல்லிகா குமார சேனாதீர ஆகியோர் வழக்கின் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment