Saturday, August 25, 2018

2015 இல் ரணில் – மைத்திரி இடையே உண்மையில் நடந்தது என்ன? – திஸ்ஸ அத்தநாயக்க அம்பலம்

August 26, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த எதிரணியுடன் இணைந்து கொண்டது ஜனாதிபதியாகும் தீர்மானத்தில் அல்லவெனவும், பிரதமராக வேண்டும் எனும் நோக்கிலாகும் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
..
இன்றைய சகோதார மொழி ஞாயிறு வார இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் குறித்து பல பெயர்கள் முன்மொழியப்பட்டன. கரு ஜயசூரிய, சோபித்த தேரர், சிராணி பண்டாரநாயக்க போன்றோர் அப்பெயர்களில் சில.
இருப்பினும், வந்தது மைத்திரிபால சிறிசேன. உண்மையில் அவர் ஜனாதிபதியாக போட்டியிட வந்தவர் அல்லர். பிரதமராக வந்தவர். பிரதமராக வந்தவரை ஜனாதிபதியாக மாற்றியது ரணில் விக்ரமசிங்க. இதுதான் உண்மையான சம்பவம்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் போட்டியிடுவர். இருந்தாலும், எதிர்க் கட்சியில் வருபவர் தான் தீர்மானம் மிக்கது. அங்கிருந்து வருபவர்தான் பொது வேட்பாளராக வருவார்.
இந்த இருதரப்பிலும் போட்டியிடுபவர் யார் என்பதை வைத்து தான் எந்த அணியில் சேர்ந்து கொள்வது என்பது குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளேன்.

நாட்டுப் பற்றுள்ள, நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான ஒருவருக்கு நான் ஆதரவு வழங்குவேன் எனவும் ஐ.தே.க.யின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment