Tuesday, August 28, 2018

40 வயதிற்கு மேல் இந்த உணவை எல்லாம் சாப்பிடாதீங்க! கண்டிப்பா தெரிஞ்சுகோங்க


August 29, 2018
   
நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா, அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும்.

அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

இறைச்சியில் கட்டாயம் மட்டனை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் கீரை உண்பதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.
பன்னீர் சேர்க்ப்படும் உணவுகளை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்லது.

பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகள் மூட்டுபிரச்சனையை தரும்.
வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும்.

முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, எண்ணெய்யில் பொரித்த உண்வுகளை இரவில் உண்பதை தவிர்த்திடுங்கள்.

0 comments:

Post a Comment