Monday, August 27, 2018

இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை மியன்மார் எதிர்கொள்ள வேண்டும்’ – ஐ.நா.


August 28, 2018

2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மியன்மாரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வன்முறை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மியன்மார் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடந்த ஆண்டு மியன்மாரில் இருந்து வெளியேறிருப்பதாக கூறும் மனித உரிமை அமைப்புகள், ஆயிரக்கணக்கோனோர் இறந்துவிட்டதாக கூறுகின்றன.
நூற்றுக்கணக்கான நேர்காணல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் ரோஹிங்கிய இன மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற வன்முறைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மிக மோசமான அச்சுறுத்துல்களை விடுத்ததற்கு இணையான நடவடிக்கைகளை மியன்மார் ராணுவம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள ஐ.நா அறிக்கை, குறிப்பிட்ட ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.

வன்முறைகளைத் தடுக்க தலையிட தவறிய, மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியை கடுமையாக விமர்சித்துள்ள ஐ.நா அறிக்கை, ரோஹிங்கிய முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியன்மார் நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

“கண்மூடித்தனமாக செய்யப்பட்ட கொலைகளையோ, கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான தாக்குதல், கிராமங்களை எரித்தல் போன்ற ராணுவத்தின் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியாது” என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment