27.08.2018
இந்தியாவின் உயர் விருது ஒன்றுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பாரத ரத்னா விருதுக்காக மகிந்த ராஜபக்ஸவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சுப்ரமணியம் சுவாமியை எமது செய்தி சேவைத் தொடர்பு கொண்ட போது, நெல்சன் மண்டேலாவிற்கு எந்த அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதே அடிப்படைலேயே மகிந்த ராஜபக்ஸவும் அந்த விருதுக்கு பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார்.
விடுதலை புலிகளை ஒழிப்பதில் மகிந்த ராஜபக்ஸவே முழுமையாக செயற்பட்டார் எனவும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment