Thursday, August 30, 2018

காழ்ப்புணர்வின் உச்சத்தினால் தனது அரசியல் எதிராளிகளை கருவறுக்கத் துடிக்கும் மு.கா தலைவர்!!

30.08.2018

வன்னியில் காட்டுதர்பார் நடத்துகின்ற அரசியல்வாதிகளை இந்த அரசியலுக்கு கொண்டுவந்தவர் மர்ஹும் நூர்தீன் மசூர் என்று மு.கா தலைவர் ஹக்கீம் அப்பட்டமாய் சாடியிருக்கும், முன்வைத்திருக்கும் காழ்ப்புணர்வுள்ள கருத்தால் ஒரு சகோதர சமூகம் இன்று சோர்வடைந்திருப்பதை பகுத்தறிவுள்ள எந்தவொரு மனிதனாலும் மறுதலிக்க முடியாததொன்றாகவே கருதப்படுகின்றது.

அதாவது, மறைந்த பிரதியமைச்சர் மர்ஹும் நூர்தீன் மசூர் நினைவாக மன்னார் எருக்கலம்பிட்டியில் வருடாந்தம் நடைபெற்று வரும் ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே மேற்படி சர்ச்சைக்குரியதும், மனவேதனைக்குரியதுமான குறித்த கருத்தினை பகிரங்கமாய் வெளிப்படுத்தியிருந்தார்.

எருக்கலம்பிட்டியின் சொத்தாகவும், நம் நாட்டு முஸ்லிம்கள் பெருமை பாராட்டும் அரசியல் ஞானமுள்ள வித்தாகவும் திகழ்ந்து எருக்கலம்பிட்டி மக்களின் உள்ளங்களை வென்று, உன்னதமாகவும், உவகையுடனும் அரசியல் செய்து மக்களின் நன்மதிப்பை வென்ற மரணித்த நமது சகோதரரை (நூர்தீன் மசூரை) பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் சூசகமாய் சாடவந்த ஹக்கீமின் சொல் வித்தை பிழைத்துப்போய் மேகங்களை கிழித்த கதிர் ஒளி போல மு.கா தலைவரினது காழ்ப்புணர்வு பகிரங்கமாய் தாண்டவமாடியதே காரணமாய் அமைந்தது.

சகோதரர் நூர்தீன் மசூரை நினைவுபடுத்தி முற்றுமுழுக்க நீதமாய், நிதானமாய் நிலைகுலையாது அவரின் அருமை, பெருமைகளை குறையின்றி குன்றாத பாசத்துடன் பேசவேண்டிய இந்த ஹக்கீம், அதிலும் குறிப்பாக எருக்கலம்பிட்டியில் பேசவேண்டிய இந்த ஹக்கீம், அதே இடத்தில் அநாகரிகமாய், மனச்சாட்சிக்கு விரோதமாய் அபாண்டமாய், கேவலமாய், இழிவாய் நூர்தீன் மசூரை பேசிய விதம், இன்று ஹக்கீமை எருக்கலம்பிட்டி மக்கள் மாத்திரமன்றி இன்னும் பல பிரதேசத்து படித்த தெளிவறிவுள்ள மக்களும் வெறுக்கும் துர்ப்பாக்கிய நிலையையே அவரது கருத்து தோற்றுவித்திருக்கின்றது. ஹக்கீம் ஒரு பச்சோந்தி எனும் தத்ரூபத்தை விளைவித்திருந்தமையை சந்தேகமின்றி நோக்கமுடிகின்றது.

தன் அரசியல் இருப்பையும், தலைமைத்துவ மோகத்தையும் இன்னும் இன்னும் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கோடு இப்போதெல்லாம் சமகாலத்தில் தன் கட்சியை அடகுவைத்து பிழைப்பு நடாத்தும் முனைப்பிலேயே நாட்டின் பல மூலைமுடுக்குகளுக்கும் சென்று கட்சி பிரச்சாரம் செய்யும் விதத்திலே தனக்கு சவாலான அரசியல் மாபெரும் சக்திகளை பழிவாங்கும் நோக்குடன் அவர்களுக்கு அவப்பெயரை தோற்றுவித்து குரோத விரோதத்துடன் அப்பாவி மக்களிடத்தில் பொய் பிரச்சாரம் செய்து, மூக்குடைபடும் துன்பியல் காலம் ஹக்கீமுக்கு பெருக்கெடுத்திருப்பதை வியப்பின்றி ஏற்கமுடிகின்றது.

குறிப்பாக, மறைந்த மர்ஹும் நூர்தீன் மசூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். கட்சிக்காக அஷ்ரபின் காலத்தில் மாத்திரமன்றி அதற்கு பிற்பாடும் பெரும்பாடுபட்டவர். அத்தோடு வன்னியில் சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்கு வங்கிகளால் அக்கட்சிக்கு பலம் சேர்த்தவர். இருந்தபோதிலும் றவூப் ஹக்கீம் போன்ற வங்குரோத்து அரசியல் தலைமையால் அநீதியாய் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

தன் கடின அரசியல் உழைப்பிற்கு தகுந்த விமோஷனத்தை பெற்றுக்கொடுப்பதில் ஹக்கீம் போன்ற மமதை வாதிகள் முட்டுக்கட்டையாக இருந்த வரலாறுகளை அரசியல் ஆய்வாளர்கள் ஒரு போதும் மறந்துவிட போவதுமில்லை. அந்தவகையில் வன்னி முஸ்லிம்களின் பிரயத்தனங்களாலும், பிரார்த்தனைகளாலும், நீதியின் அடிப்படையிலும் நூர்தீன் மசூருக்காக மக்கள் உரிமைக் குரல் எழுப்பி கட்சியிடமிருந்து பொறுப்புமிக்க பிரதியமைச்சர் பதவியையும் பெற்றுக்கொடுத்த மக்கள் போராட்டத்தையும் மக்கள் ஒரு போதும் மறந்துவிடப்போவதுமில்லை.

மர்ஹும் நூர்தீன் மசூர் அவர்களை புகழ்ந்தும், புகழாமலும், இகழ்ந்தும் இகழாமலும் ஹக்கீம் பேசிய நிலை மென்மேலும் புத்திஜீவிகளிடத்தில் ஆத்திரத்தையும், மனவருத்தத்தினையுமே உருவாக்கியிருக்கின்றது.

ஏற்கனவே புத்தளத்து நகரபிதா பாயிஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துகொள்ளும் நிகழ்வொன்றிலே மர்ஹும் மசூர் அவர்களை இந்த சாமர்த்தியமில்லாப் புலவர் மு.கா தலைவர் ஹக்கீம் “பாழாய்ப்போன இந்த மசூரால்தான் வன்னிக்கு இந்த கஷ்டம்” என்னும் அகௌரவ வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்தி, தன் அதியுச்ச காழ்ப்புணர்வினை தீர்த்தது மட்டுமன்றி ரிஷாட் பதியுதீன் போன்ற அரசியல்வாதிகளை வீழ்த்துவதற்காகத்தான் பாயிஸ் போன்ற கட்டாடிகளை தான் உள்வாங்குவதாக மேடையில் கூவியவரும் இந்த மு.கா தலைவரே!!!

-நஜிமுடீன் எம்.ஹஷான்–
Srilanka muslim

0 comments:

Post a Comment