Saturday, August 25, 2018

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அதிகாரம் பிரச்சினை- ஐ.நா. அறிக்கை

August 26, 2018

இலங்கையில் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பு தொடர்பில் சட்ட ஒழுங்கொன்றை உருவாக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

இந்த கோரிக்கை உட்பட 60 விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அக்குழு தனது பரிந்துரையை இம்முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும் எனவும் கூறப்படுகின்றது. இது இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தில் கை வைக்கும் நடவடிக்கை எனவும் விமர்ஷனங்கள் எழுந்துள்ளன.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அரச சார்பற்ற அமைப்புக்களினால் இவ்விடயம் ஐ.நா. விசேட பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

0 comments:

Post a Comment