Sunday, August 26, 2018

வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கச் சென்ற பா.ஜ.க.வினரின் படகு கவிழ்ந்து விபத்து

August 27, 2018

உத்தரபிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க ஆற்றுக்குள் சென்றவா்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் கடந்த 16ம் தேதி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானாா். அவரது உடல் டெல்லியில் உரிய அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மேலும் வாஜ்பாயின் அஸ்தில் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நதிகளிலும் கரைக்கப்படும் என்று பா.ஜ.க. சாா்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வாஜ்பாயின் அஸ்தி உத்தரபிரதேசம் உட்பட நாடுமுழுவதும் உள்ள பா.ஜ.க. மாநில தலைவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் வாஜ்பாயின் அஸ்தியை ஆற்றில் கரைக்க பா.ஜ.க. மாநில தலைவா் ராமபதி ராம் திரிபாதிஇ எம்.பி. ஹரிஷ் திவேடிஇ ராம் சௌத்ரி உள்ளிட்டோா் படகு மூலம் ஆற்றுக்குள் சென்றனா்.

படகில் அதிக அளவில் ஆட்கள் ஏறியதால் படகு திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. படகு கவிழத் தொடங்கியதும் ஒரு பகுதியினா் ஆற்றில் குதித்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் மீட்டனா். இந்த விபத்தில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

0 comments:

Post a Comment