August 23, 2018
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடுவதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று ஞானசார தேரர் தொடர்பில் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஞானசார தேரருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்க புத்தசாசன அமைச்சினூடாக செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செய்வதாக இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






0 comments:
Post a Comment