Tuesday, August 28, 2018

வைத்தியசாலை பகுதிகளிலிருந்து அகற்றப்படாத சத்திர சிகிச்சை கழிவுகள்

28.08.2018

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கழிவுகள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக வைத்தியசாலை பகுதியிலிருந்து அகற்றப்படவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கழிவுகள் வலிப்பு நோய் சிகிச்சை கட்டிடத்திற்கு பின்னால் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் சுகாதாரத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

குறித்த கழிவுகளில் மனித உடற்பாகங்கள், சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சு, பிளேட் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுவதனால் இவைகளை அன்றாடம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

dailyceylon

0 comments:

Post a Comment