Sunday, August 26, 2018

பிரதமர், ஜனாதிபதி உட்பட அரச ஊழியர்களுக்கு விமானத்தில் 1 ஆம் வகுப்பில் செல்ல தடை

August 26, 2018

பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அந்நாட்டின் சகல அரச அதிகாரிகளினதும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது 1 ஆம் வகுப்பில் விமான ஆசனப் பதிவு செய்வதை அந்நாட்டு புதிய அரசாங்கம் தடை செய்ய தீர்மானித்துள்ளது.
பிரதமர் இம்ரான் கானின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூடிய போது இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி அரச பணத்தில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகள் எவரும் விமான ஆசன ஒதுக்கீட்டின் போது 1 ஆவது வகுப்பில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை கல்விக்கான மத்திய நிலையமாக பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிருவாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு இம்ரான் கான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

0 comments:

Post a Comment