Sunday, August 26, 2018

தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க திட்டம்

26.08.2018

தங்கத்திற்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்தினால் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரி நூற்றுக்கு 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தங்க வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரியுள்ளனர்.

ஜனாதிபதியுடனும், நிதி அமைச்சருடனும், தம்முடனும் தற்போதைய நாட்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தங்கத்திற்கான இறக்குமதி வரியை நூற்றுக்கு 15 சதவீதத்திலிருந்து குறைந்தது 7.5 சதவீதமாக குறைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment