Friday, August 24, 2018

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானம்

24.08.2018

தமது வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காத நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ள உள்ளதாக தொடரூந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தொடருந்து தொழிற் சங்கத்திற்கும் வேதன ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று முற்பகல் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவுற்ற நிலையிலேயே பணிப்புறக்கணிப்பு தொடர்பான அறிவிப்பை தொடரூந்து தொழிற்சங்கம் விடுத்துள்ளது.

இதனிடையே, தொடரூந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment