, 21 JULY 2018
மத்திய மாகாணத்தில், தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவ நிலையங்களை, ஆரம்ப மருத்துவமனைகளாக மாற்றும் செயற்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 200க்கும் மேற்பட்ட தோட்ட மருத்துவநிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 105 மருத்துவ நிலையங்களை ஆரம்ப மருத்துவ பிரிவுகளாக கட்டியெழுப்புவதற்கான தெரிவு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இது குறித்த அறிக்கை பெருந்தோட்டதுறை அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு அமைய தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள 200க்கும் அதிகமான மருத்துவநிலையங்களை சுமார் 105 பிரிவுகளாக தொகுத்து அவற்றை சுகாதார அமைச்சர் பராமரிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி இதுவரைக்காலமும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்த குறித்த மருத்துவநிலையங்கள் அரச நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கப்படுவதுடன் அவற்றின் பராமரிப்பு, நிர்வாகப் பணிகள் அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் அதற்கான மருத்துவர்கள் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்டவர்களாகவும் இருப்பர் என, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சூரியனின் செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment