0.6.2018
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை , வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தொட்டை மாவட்டங்களிலும் இன்று காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மாவட்டத்தில் சில இடங்களில் இன்று மழைப்பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிப்பென்ன, வெத்தாகல, பல்லேபெத்த, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மஹய்யாவ ஆகிய இடங்களில் இன்று சூரியன் உச்சம் பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது






0 comments:
Post a Comment