Thursday, September 6, 2018

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புக்களை பெற்றுக்கொள்ள புதிய திட்டம்!


06.092 018

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தேவையான உடல் உறுப்புக்களை விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்ல தேவையான சட்ட முறைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் , நாட்டின் அநேகமான மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் , அவற்றுக்கு தேவையான உடல் உறுப்புக்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இலங்கை விமானப்படையின் ஆதரவு அமைச்சரவை குறிப்பாணையின் படியே கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் , தேவையான சட்ட முறைகளின் படி இதனை தொடர்ந்து முன்னெடுக்க நாடாளுமன்றில் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட ​வேண்டும் என விசேட மருத்துவர்கள் சுகாதார அமைச்சருக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கண்டி பொது மருத்துவமனைகளில் தற்போதைய நிலையில் சுமார் 40 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment