Wednesday, September 5, 2018

ஜனபலய சத்தியாக்கிரகம் நிறைவு, கொழும்பில் இயல்பு நிலை

06.08.2018

கூட்டு எதிர்க் கட்சியின் “ஜனபலய” எதிர்ப்பு நடவடிக்கை
நிறைவடைந்துள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பாதையில் தற்பொழுது எந்தவொரு ஆர்ப்பாட்டக் காரர்களும் இல்லையெனவும், பாதையைச் சுத்தம் செய்யும் பணியில் நகர சபை சுத்திகரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் களத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நேற்று கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நேற்றிரவு கொழும்பில் சத்தியாக்கிரக போரட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அதிகாலையாகும் போது அனைவரும் கலைந்துசென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment