Tuesday, September 4, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 இலத்திரனியல் கடவைகள்

September 5, 2018

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10 இலத்திரனியல் கடவைகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பிரயானிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவே இந்த இலத்திரனியல் கடவைகள் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமான நிலையத்தில் தற்காலிக பிரயாணிகள் நிலையமொன்றையும் அமைப்பதற்ற்க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment