Monday, October 29, 2018

கத்தாரிலிருந்து இன்று முதல் EXIT PERMIT இன்றி பயணிக்கலாம் - உள்துறை அமைச்சின் உத்தியோக பூர்வ அறிவிப்பு!

  October 29.2018

கத்தார் வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இன்று முதல் (ஒக்டோபர் - 28) கத்தாரிலிருந்து EXIT PERMIT இன்றி பயணிக்க முடியும் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

கத்தார் தொழிலாளர் சட்டத்தின் குடிவரவு, மற்றும் குடியகல்வு சட்டத்தில் அண்மையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அவர்கள் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கத்தாரை விட்டு EXIT PERMIT இன்றி தொழிலாளர்கள் பயணிக்க முடியும் என்ற சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக கத்தார் உள்துறை அமைச்சு அறிவிப்பு செய்துள்ளது.

என்றாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் (நிதி சம்மந்தப்பட்ட) பணியாளர்கள், (5%) பெயர் விபரங்கள், ஏற்கனவே உள்துறை அமைச்சுக்கு நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த 5 வீதமான பணியாளர்கள், கத்தாரை விட்டு தாயகம் திரும்ப EXIT PERMIT கட்டாமாகும்.

மேலும் வெளிநாட்டு பணியாளர்கள் ஏதாவது காரணங்களால் கத்தாரை விட்டு வெளியேற முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டால், Expatriate Exit Grievance Committee ஐ நாடமுடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 3 பணிநாட்களுக்குள் தீர்க்கமான முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment