Tuesday, October 30, 2018

அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌தே ச‌ரியான‌ முடிவாக‌ இருக்கும் ; மௌல‌வி முபாற‌க்…!

30.10.2018

இன்றைய‌ ‌ சூழ் நிலையில் அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் நாட்டின் ய‌தார்த்த‌தை உண‌ர்ந்து மைத்திரி ம‌ற்றும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுடன் இணைந்து அர‌சாங்க‌த்தை அமைப்ப‌தே புத்திசாலித்த‌ன‌மான‌ முடிவாக‌ இருக்கும் என‌ ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌வுன்சில் தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாவ‌து,

இந்த‌ நாட்டின் அர‌சிய‌ல் அதிகார‌ம் ஜ‌னாதிப‌தியிட‌மே உள்ள‌து. அவ‌ரை எதிர்த்துக்கொண்டு எதையும் எவ‌ரும் செய்ய‌ முடியாது. முஸ்லிம் க‌ட்சிக‌ள் க‌ட‌ந்த‌ மூன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளாக‌ ஐ தே க‌ த‌லைமையிலான‌ ஆட்சிக்கு ஆத‌ர‌வ‌ளித்தும் ச‌மூக‌ம் இழ‌ந்த‌வைக‌ளே அதிக‌ம்.

இந்த‌ நிலையில் த‌ற்போது ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் ஒரே க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்களாக‌ இருப்ப‌து ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌மாகும். அத்துட‌ன் இருப‌க்க‌மும் ச‌ம‌ எண்ணிக்கையிலான‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் உண்டு.

இந்த‌ நிலையில் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு யாருக்கும் ஆத‌ர‌வ‌ளிக்காம‌ல் ந‌டு நிலை வ‌கிக்கும் நிலை ஏற்ப‌ட்டால் ஜ‌னாதிப‌தியின் த‌ர‌ப்பு வெற்றி பெறும்.

அப்ப‌டித்தான் த‌. தே. கூட்ட‌மைப்பு ஐ தே க‌வுக்கு ஆத‌ர‌வ‌ளித்தால் ர‌ணிலின் ஆட்சி ச‌ரியில்லை என‌ க‌ட‌ந்த‌ கால‌த்தில் சொன்ன‌து போன்று எதிர் கால‌த்திலும் சொல்ல‌ வேண்டி வ‌ந்தால் நிச்ச‌ய‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் த‌. தே. கூட்ட‌மைப்பை நிராக‌ரிப்பார்க‌ள் என்ப‌து கூட்ட‌மைப்புக்கு தெரியும்.

அத்துட‌ன் ஜ‌னாதிப‌தியை எதிர்த்துக்கொண்டு ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வால் த‌மிழ் கூட்ட‌மைப்புக்கு எந்த‌ உத‌வியும் செய்ய‌ முடியாது.

ஆக‌வே இன்றைய‌ கள‌ நில‌வ‌ர‌ம் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌வுக்கு சாத‌க‌மாக‌ உள்ள‌துட‌ன் முஸ்லிம் ச‌மூக‌த்தின் குர‌லாக‌ துணிந்து செய‌ற்ப‌டும் ஆற்ற‌ல் கொண்ட‌ அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் தேசிய‌ த‌லைவ‌ர் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌தே ச‌ரியான‌ முடிவாக‌ இருக்கும் என்ப‌தை ஓர் ஆலோச‌னையாக‌ முன் வைக்கிறோம்.

மௌல‌வி முபாற‌க் ம‌த‌னி

த‌லைவ‌ர்

ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌வுன்சில்

0 comments:

Post a Comment