Monday, October 29, 2018

அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டு - பிணையில் விடுவிப்பு

October 29, 2018

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (29) முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

5.50 PM - கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

6.10 PM - கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

6.35 PM - தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரியை நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நன்றி
அததெரண

0 comments:

Post a Comment