Saturday, October 27, 2018

பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க தரப்பினர் கோரிக்கை எழுத்தாளர்

27 Oct, 2018 | 8:

Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் அலரி மாளிகையில் இன்று ஊடக சந்திப்பினை நடத்தினர்.

இதன்போது தமக்குப் பெரும்பான்மை இருப்பதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் தமது கட்சி தொடர்ந்து பயணிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கும் நடவடிக்கையில் அரசியல் தலைவர்கள் செயற்படுவது வருந்தற்குரிய விடயம் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார்.

முப்படையினரும் பொலிஸாரும் நாட்டில் குழப்ப நிலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக பொறுப்புணர்ச்சியுடன் நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இல்லாமல் அரசாங்கத்தைத் தம்மால் அமைக்க முடியும் என ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

மக்கள் ஆணை ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதாகவும் பாராளுமன்றத்தினைக் கூட்டி யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தினைக் கூட்டுவதற்கு ஏன் பயப்படுகின்றனர் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

தன்னைக் கொல்வதற்கு 5 தடவைகள் முயற்சித்தாகக் கூறப்படும் நபர், தான் தோல்வியடைந்தால் 6 அடிக்குள் அனுப்புவதாகக் கூறிய நபரை பிரதமராக நியமித்து, அனைத்து வரப்பிரசாதங்களையும் வழங்கிய தலைவர்கள் மற்றும் மக்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோருவதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment