Sunday, September 9, 2018

ஞானசார தேரர் வெளியேற வைத்தியர்கள் மறுப்பு, இன்றும் செல்ல முடியாத நிலை

September 9, 2018

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசார தேரர் இன்று (09) வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடாகியிருந்தும் அது தடைப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தேரருக்கு இன்னும் பல பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இன்னும் சில தினங்களுக்கு தேரரை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்க வேண்டியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

0 comments:

Post a Comment