September 5, 2018
மைத்திரி அரசாங்கத்தில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாலேயே கொழும்பில் இன்று (05) ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று விடுமுறை நாளல்ல. மாணவர்கள், அரச ஊழியர்கள் எனப் பலரும் கொழும்புக்கு வருவார்கள். அவர்களது போக்குவரத்து வசதிகளுக்கு நாம் இடையூறு ஏற்படுத்த மாட்டோம். அதற்காக பஸ் போக்குவரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம் எம்.பிகளுக்கு இடையூறின்றிக் கொழும்புக்கு வரவும் திரும்பிச் செல்லவும் இடையூறு செய்யப்படுமானால், அதற்கு எதிராக பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
இவர்கள் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு அவற்றை சுற்றிவளைப்பதாகவும் எச்சரித்துள்ளார்கள்.
நாம் கொழும்பு வரவேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால், மதுக்கடைகளுக்கு இன்று அமோக வியாபாரமிருக்கும்.
எக்னலிகொடவுக்கு நடந்தது போலவோ, லசந்தவை சுட்டது போன்றோ கீத் நொயாருக்கோ உபாலி தென்னகோனுக்கோ நடந்தது போன்று இன்று எதுவும் நடக்காது எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் நேற்று (04) கூறினார்.






0 comments:
Post a Comment