Tuesday, September 18, 2018

அடுத்த பாதீட்டுத் திகதியில் மாற்றம்

19.09.2018

அடுத்தாண்டுக்கான பாதீட்டு (வரவு - செலவுத் திட்டம்) முன்மொழிவுகள், எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதெனத் தெரியவருகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனத் தெரியவருகிறது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி, அடுத்த பாதீடு, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றம், அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்குக் கூடவுள்ளது.

நவம்பர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை பாதீட்டுக்கான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், 14ஆம் திகதி, பாதீட்டுக்கான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, பாதீடு மீதான குழுநிலை விவாதங்கள் இடம்பெறவுள்ளன. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாதீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி, இறுதி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment