04.09.2018
கொழும்பில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு பேரணி தொடர்பில் சிறப்பு கூட்டமொன்று தற்போதைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுகிறது.
இதில் , கூட்டு எதிர்க்கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் , அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்ப்பு பேரணி இடம்பெறும் இடம் மற்றும் அதன் திட்டம் தொடர்பில் இதில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் , இன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment