Tuesday, September 18, 2018

ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.

September 18, 2018

ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில்விடுதலை செய்ய வேண்டுமென ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர்  தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில் விடுதலை  செய்ய வேண்டும்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட வரையறைகளுக்குள்  இருந்து செயற்படாமல்  பௌத்தமத கோட்பாடுகளினை கருத்திற் கொண்டு   இவரது விடுதலையில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என  ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தாகந்தே சுதத தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டி ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளமையானது சட்டத்தில்  ஏற்றுக் கொள்ள கூடியதாக காணப்பட்டாலும்  பௌத்தமத  கோட்பாடுகளுக்கு முரணானதாகவே காணப்படுகின்றது. 

நீதிமன்றத்தினை அவமதித்தவர்கள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் காணப்படுகின்றனர்.இராணுவத்தினரது உரிமைக்காகவே இவர் குரல் கொடுத்தாரே தவிர   தனிப்பட்ட விடயங்களுக்கு  அல்ல என்ற விடயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்  என்றார்.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(இராஜதுரை ஹஷான்)

0 comments:

Post a Comment