Tuesday, September 11, 2018

கத்தார் எயார்வெய்ஸ் விமான டிக்கட்களுக்கான 30 வீதம் வரையிலான தள்ளுபடி அறிவிப்பு


September 11, 2018 

கத்தாரின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான கத்தார் எயார்வெய்ஸ் கத்தாரில் இருந்து பறக்கும் பயணங்களுக்கான 30 வீதம் வரைவிலான தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது.

கத்தார் எயார்வெய்ஸ் யின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.qatarairways.com ஊடாக புக்கிங்களை செய்யும் போது இந்த 30 சதவீத கழிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள், செப்டம்பர் மாதம் 10 - 18 திகதிகளுக்கிடையில் டிக்கட்டுக்களை புக்கிங் செய்து கொள்ளும் படியும், பயணங்களை 2019ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதிக்கு முன்னராக அமைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த தள்ளுபடி முடிவடைய 08 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் இந்த இணையதளத்தை பார்வையிடவும்
www.qatarairways.com

0 comments:

Post a Comment