Sunday, September 16, 2018

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ கருத்து

September 16, 2018

மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் நாட்டிற்குப் பயனற்ற ஒன்றாகும்  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தோல்வியான ஒரு முயற்சியாகும். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடாத்தப்படல் வேண்டும். இவர்கள் குறுக்கு வழியில் சட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்

. உயர் நீதிமன்றம் அதற்கு இடமளிக்க மாட்டாது.

நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்துமாறே பொது மக்களும் அன்று வீதிக்கு வந்து அரசாங்கத்தைக் கேட்டனர். இருப்பினும், அதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த விதமான பதிலையும் அளிக்க வில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment