Tuesday, August 7, 2018

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட பிரிவு


August 8, 2018

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளில் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக உறுதியான தகவல்கள் சாட்சியங்களுடன் காணப்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பும் விழாவின்போது இந்த விசேட பிரிவினை துரிதமாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்களால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாகவே இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 011 2034159 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 011 – 2879976 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக சாட்சியங்களுடன் கூடிய தகவல்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், “பணிப்பாளர் – விசாரணைகள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, சொபாதம் பியச, இல. 416/ சீ/1, ரொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்ல” என்னும் முகவரியில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

23,000 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்த நாட்டின் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை எவ்வித முறைக்கேடுகளுமின்றி முறையாகவும் வினைத்திறனாகவும் நிறைவு செய்து, அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

0 comments:

Post a Comment