Wednesday, October 3, 2018

தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டிய காவற்துறை அதிகாரி கைது


04.10.2018

களுத்துறை - தெம்புவனவில் நேற்று கைது செய்யப்பட்ட காவற்துறை அதிகாரி இன்று மதுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும் அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு நீதி கிடைக்காவிடின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவித்து குறித்த காவற்துறை அதிகாரி நேற்று தெம்புவன நகரில் எதிர்ப்பில் ஈடுபட்டார்.

பின்னர் காவற்துறையினரின் தலையீட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் , குறித்த காவற்துறை அதிகாரியின் மனநிலை தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தார்.

குறித்த காவற்துறை அதிகாரி யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் கடத்தல் பாரவூர்தியொன்றை தான் காவற்துறை பொறுப்பின் கீழ் கொண்டு வந்ததாகவும் , பின்னர் தெம்புவன காவல்நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்து குறித்த காவற்துறை அதிகாரி இவ்வாறு எதிர்ப்பில ்ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் தனது கடமை துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துக்கொள்வதாக அச்சுறுத்தியிருந்த நிலையில ்நேற்று காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment