Thursday, September 13, 2018

மக்களுக்கு யார் தேவை என்பதை கட்சியும் கூட்டமைப்பும் தீர்மானிக்க வேண்டும்

14.09.2018

புதுடெல்லி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் வேட்பாளராகக் களமிறங்க முடியும்,எவ்வாறாயினும், மக்களுக்கு யார் தேவை என்பதை கட்சியும் கூட்டமைப்பும் தீர்மானிக்க வேண்டும் எனவும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார்.இந்த அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்சே டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சாமி வரவேற்றார்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜபக்சே சந்தித்துப் பேசினார். இதில் இருவரும் பல்வேறு பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினார்கள்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நிருபர்களிடம் கூறியதாவது : அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குடும்ப உறுப்பினரா அல்லது வௌிநபர்களா வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளனர் என தி ஹிந்து நாளிதழ் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 30 இல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையால், தனது மகனான நாமல் ராஜபக்ஸவால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது தெரிவித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில், தில்லியில் இந்தியா-இலங்கை உறவுகள்; அதை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பாதை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராஜபட்ச கலந்து கொண்டு பேசியதாவது:விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் கலந்தாலோசனை நடத்துவது தொடர்பான கொள்கையை இலங்கை கடைப்பிடித்தது. இந்த நோக்கத்துக்காக, இருதரப்பிலும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில் இருக்கும் அதிகாரிகள், பரஸ்பரம் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்தனர்.

பொருளாதாரம், சமூகம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இதேபோன்ற நடைமுறையை இந்தியாவும், இலங்கையும் கொண்டு வர வேண்டும்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஒருபோதும் நாங்கள் இனரீதியிலான போராக கருதக் கூடாது. தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை.அந்த தீவிரவாத அமைப்பின் (விடுதலைப்புலிகள் அமைப்பு) செயல்பாடானது, இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது. இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை அவர்கள் படுகொலை செய்தனர். இதை எப்போதும் மறக்கக் கூடாது.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது ஒரு இனத்தினருக்கு பயன் தரும் நடவடிக்கையாக பார்க்கக் கூடாது. அதனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நன்மையாகும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக நடைபெற்ற வேளையில், பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளரும், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சரும் என்னைத் தொடர்பு கொண்டு, உடனடியாக போரை நிறுத்தும்படி வலியுறுத்தினர். ஆனால் அதை நான் நிராகரித்து விட்டேன். அப்படி செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என நான் பதிலளித்தேன்.

இந்தியாவுடன் இணக்கமான நட்புறவு வைத்து கொள்வது மற்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவையே எனது எதிர்கால வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாகும் என்றார் ராஜபட்ச. சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், இலங்கையில் தேர்தலுக்கு பிறகு அடுத்து ராஜபட்சதான் அரசு அமைப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. இலங்கையில் இருந்து தீவிரவாதத்தை அவர் அழித்து, நாட்டை சுத்தப்படுத்தினார். இதனால் சர்வதேச நாடுகள் முதலீடுக்கான உகந்த மையமாக இலங்கையை தற்போது கருதுகின்றன’ என்றார்.நிகழ்ச்சியில் ராஜபட்சவுடன் இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ், மகன் நாமல் ராஜபட்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment