Monday, September 17, 2018

இலங்கையில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்! மக்களிற்கு நிம்மதி..


17.09.2018

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை இன்றைய தினத்தின் பின்னர் படிப்படியாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்த திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழைபெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த சில நாட்களிலும் பார்க்க காற்றி வேகம் சற்று அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வரட்சியினால் 17 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில பிரதேசங்களில் பொது மக்கள் குடிநீருக்காக பாரிய பிரச்சினைகளை எதிர்க் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, நிலவும் அதிக வெப்பம் காரணமாக பல பிரதேசங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரதான நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள காரணத்தினால் நீர் மின் உற்பத்தி 25 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment