Monday, September 10, 2018

வெட் வரியை மீள செலுத்த விசேட பிரிவு நாளை அங்குரார்ப்பணம்

10 SEPTEMBER 2018

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் 15 சதவீத பெறுமதி சேர் வரியை, நாட்டிலிருந்து வெளியேறும் போது அவர்களிடம் மீளக் கையளிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கான விசேட கருமபீடம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறுதல் பகுதியில் நாளைய தினம் பிற்பகல் திறந்துவைக்கப்பட உள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்வைக்கப்பட்ட இந்த முறைமைக்குள் தம்மை உள்ளீர்த்துக் கொள்வதற்காக, உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின், சுற்றுலா வற் வரியை மீளச் செலுத்துதல் திட்டத்தின்கீழ், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், தமது வர்த்தக நிறுவனங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையானது, இலங்கையை ஆசியாவில் வரத்தக கேந்திர நிலையமாக நிறுவுவதற்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment