September 13, 2018
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மொஹமட் சித்தீக் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
அவருடன் சேர்த்து சம்பந்தப்பட்ட மேலும் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
8.1 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தமை கூறத்தக்கது.
மாபெரும் போதைபொருள் வர்த்தகராக அறியப்பட்ட இவர் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.






0 comments:
Post a Comment