Sunday, September 9, 2018

கடும் வெப்ப காலநிலை இந்த மாத இறுதி வரை

10.09.2018

நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலை இந்த மாத இறுதியளவில் குறைவடையக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் குறைவடைந்தமை மற்றும் நட்சத்திரங்கள் அற்ற வானம் ஆகியனவே கடும் வெப்பத்துடனான வானிலை நிலவக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பல பகுதிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு ஒரு லட்சத்து 1021 குடும்பங்களை சேர்ந்த மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வரட்சி காரணமாக மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment