Monday, September 10, 2018

துப்பாக்கிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஒக்டோபர் மாதம் ஆரம்பம்

10,09.2018

துப்பாக்கிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் ரவைகளின் உரிமையாளர்கள், பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்து, வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை, மாவட்ட செயலகத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில், பாதுகாப்பு அமைச்சில் 1,341 துப்பாக்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சின் மேலதிக செயலாளர் என் ஜே. பண்டித்த ரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்திற்குப் பின்னர், அனுமதிப்பத்திரங்கள் இல்லாத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், பாதுகாப்பு அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

0 comments:

Post a Comment