Sunday, September 9, 2018

இறந்த மகனின் விந்தணுவை வைத்து பேரனை பெற்றெடுத்த பெற்றோர்!


September 9, 2018
   
பிரித்தானியா சாலை விபத்தில் பலியாகிய மகனின் விந்தணுவை வைத்து, இளைஞரின் பெற்றோர் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த 50 வயதான பணக்கார தம்பதியினரின் 26 வயது மகன் சாலை விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார்.

இறந்த மகனின் விந்தணுவை சிறுநீரக சிறப்பு மருத்துவர் ஒருவரின் உதவியுடன் வெளியில் எடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து வரும் கடுமையான சட்டத்தினால் அதனை அமெரிக்காவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெண்ணின் கருமுட்டை உதவியுடன் விந்தணு செலுத்தப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவர் David Smotrich கூறுகையில், இறந்த ஒரு மனிதனின் விந்தணு அடுத்த 72 மணிநேரம் உயிருடன் இருக்கும். அப்படி இருக்கும்போது தான் அந்த இளைஞரின் விந்தணு எடுக்கப்பட்டது. அங்கு உள்ள கடுமையான சட்டங்களை தவிர்த்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.

இங்கு கடந்த 2015-ம் ஆண்டு குழந்தை பிறந்ததும், குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோர்களாக தம்பதியினர் பெயரிடப்பட்டதும், பின்னர் பிரித்தானியாவிற்கு சென்றனர் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக மருத்துவர் David Smotrich, கடந்த 1997 ஆம் ஆண்டில் ஒரே பாலின அமெரிக்க தம்பதிக்கு முதல் டெஸ்ட்-குழாய் குழந்தையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment