Friday, August 3, 2018

வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டமைக்கான மேலும் ஒரு காரணம்

, 03 AUGUST 2018 -

ஆயிரம் சீ.சீக்கும் குறைவான இயந்திர வலுவை கொண்ட வாகனங்களின் வரி அதிகரிப்பதற்கான காரணம் போக்குவரத்து நெரிசல் மாத்திரம் அல்லவென மத்திய வங்கியின் அளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அதிகரித்த இறக்குமதியால், வர்த்தக இடைவெளி அதிகரிப்பை தடுப்பதும் இதன் நோக்கம் என மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக இடைவெளி அதிகரிக்கும் போது வெளிநாட்டு கடன்களை அதிகளவில் பெற வேண்டி நிலை ஏற்படுவதுடன், ரூபாவின் பெறுமதியும் .. T என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரதிபலனாக வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்பதால் பொது மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment