Wednesday, June 20, 2018

இறக்காமம் குளக்கரை ஓரத்தில் சிறுவர் பூங்கா அமைக்க சமீம் கோரிக்கை (படங்கள்)

20.06.2018

இறக்காமம் ஆறாம் பிரிவு அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதான தென்கிழக்கு எல்லைப்புற குளக்கரை ஓரத்தில் சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கான பொருத்தமான ஒரு காணி காணப்படுகிறது.

அந்த வகையில் இக்காணியைக் கோரி ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்
கே.எல்.சமீம் (BA) அவர்கள் சென்ற 05.06'2018 இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் அவர்களுக்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இறக்காமம் பிரதேச செயலாளர் அவர்கள் குறித்த காணியானது சிறுவர் பூங்கா அமைப்பதற்கு பொருத்தமான ஓர் இடம் என சிபாரிசு செய்யப்பட்டு இதற்கான அனுமதியை வழங்குமாறு 20.06.2018 நீர்ப்பாசன பொறியியலாளர் நீர்ப்பாசனத் திணைக்களம் அக்கரைப்பற்றுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் குறித்த காணியானது தனியாருக்கு சொந்தமில்லை எனவும் இக்காணியானது குளத்துக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment