Wednesday, June 27, 2018

இஸ்லாமிய விழுமியப் பண்புகளையும் நற்குணப் பண்புகளையும் பின்பற்றி நடக்கவேண்டும் இறக்காமம் ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் அல் ஹாஜ் றௌவுப் மௌலவி (படங்கள்)

June 27.2018 

இன்று சமூகத்தில் இளைஞர்களிடம் ஒழுக்க விமுமியப்பண்புகள் குறைந்து வருகின்றன பிள்ளைகள் பெற்றோரை எதிர்த்து பேசுகின்றார்கள் தர்க்கித்து விவாதம் செய்து சமூகத்தில்
பிரட்சினையை ஏற்படுத்துகின்றார்கள்.

பொறாமை கீழ்படிவின்மை எதிர்க்கும் தன்மை போன்றகுணங்கள் தற்போது  கானப்படுகின்றன. ஒரு சிலர் தான் சார்ந்த இயக்கத்திற்கு சார்பான புத்தங்களை படித்துவிட்டு ஊரைக்குளப்பி கிராமத்தை வேறுபடுத்துகின்றார்கள்.

பாடசாலை விடுமுறை தினங்களில் இஸ்லாமிய வகுப்புக்களுக்கு மாணவர்களை வாருங்கள் என அழைத்து தான்சார்ந்த இயக்க ரீதியான கொள்கைகளை பிள்ளைகள் மத்தியில் விதைக்கின்றார்கள்.
இதனால் மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் உலமாக்களையும் விமர்ர்சித்து சமூகத்தில் பிரட்சினையை ஏற்படுத்துகின்றார்கள்.

ஆகையால் இவை சமூகத்திலிருந்து களையப்படவேண்டும்  நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரிகளை பின்பற்றி தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இவற்றின் மூலம் சமமூக ஒற்றுமை ஏற்படுத்தலாம் என கூறினார்.

இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில்  நோண்புப் பெருநாள் விழா அண்மையில் அதிபர் றிபாயா நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு    தெரித்தார்.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக  சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எம் எச் எம் ஜாபீர்  இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளர்   யூ.எல். மஹ்மூது லெவ்வை 

உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ். எல் .நிஸார் ஆசிரியர் ஆலோசகர்களான ஏ அஸீஸ்  யூ .எல் .ஜெபீர் முன்னாள் போக்குவரத்துச்சபை கிழக்குப் பிராந்திய பணிப்பாளர் எம் என் நஸீர் ஆகியோரும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.                      

0 comments:

Post a Comment