Thursday, June 28, 2018

வாகனம் ஓட்ட அனுமதியின் பின் நேரலையில் அநாகரீக உடை: சிக்கலில் சவுதி பெண் தொகுப்பாளர்

June 28, 2018 

சவுதி அரேபியாவில் அநாகரீக உடை அணிந்ததற்காக பெண் தொகுப்பாளர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் சில நாட்களுக்கு முன் பெண்கள் வாகனம் ஓட்டம் அனுமதி வழங்கப்பட்டது.

இதனை கொண்டாடும் விதமாக பலரும் வாகனங்களின் பயணிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இதுதொடர்பான செய்தியை AL AAN TV சார்பில் பெண் தொகுப்பாளர் ஷிர்ரீன் அல்-ரிபாய் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக அடித்த காற்றால் அவர் அணிந்திருக்கும் உடை வெளியில் தெரிந்தது, முடியும் வெளியில் தெரியும் வண்ணம் ஹிஜாப் அணிந்திருந்தார்.

இவரது உடை மிகவும் அநாகரீகமாக இருந்ததாக கூறி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம், இவரது கடவுச்சீட்டு கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment