21, 06. 2018
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதால் நோய் தொற்றுக்கள் ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனும் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருளானது, கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் மூலம் உருவாகிறது.
நாம் அனைவரும் அழுக்கு என்று நினைத்து சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறது.
நாம் அதிக சப்தம் மற்றும் பாடல்கள் கேட்பதால், நமது காதை அது வலுவாக பாதிக்கும். எனவே அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து நமது காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் பயன்படுகிறது.
பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக படர்ந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இந்த முறையை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.
காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் பகுதியில் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பஞ்சு, துணி, தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை குச்சி, தீக்குச்சி போன்ற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி நமது காதை சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால், காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி பாதிக்கப்படுகிறது.
மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும் காதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.
இதை கண்டிப்பாக நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நம் காது கண்டிப்பாக பாதிக்கப்படும். குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
.






0 comments:
Post a Comment