Thursday, June 28, 2018

இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கவனம் எடுக்காவிட்டால் முஸ்லிம் சமூகத்திற்கான மாகாண சபைக்கான பிரதிநதிதுவங்களை நாம் இழக்க வேண்டி வரும்

June 28, 2018

.
மாகாண சபைகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிதுவங்களில் அநீதி ஏற்படக்கூடிய புதிய மாகாண சபை திருத்த சட்ட முறைமைக்கு முஸ்லிம் அரசியல் தலமைகள் பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கி விட்டு தற்போது பழைய முறையில் மாகாண சபை தேர்தல் நடைபெற வேண்டும் என ஏமாற்று அரசியல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு மாகாண சபை பிரதிநிதிதுவங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கவனம் எடுக்காவிட்டால் முஸ்லிம் சமூகத்திற்கான மாகாண சபைக்கான பிரதிநதிதுவங்களை நாம் இழக்க வேண்டி வரும் என தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் எம்.எஸ்.எம். பைறூஸ் தலைமையில்  அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 

 

தொடர்ந்து உரையாற்றுகையில்....

நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அரசில் இது வரையில் முஸ்லிம் சமூகத்திற்கான எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படாத நிலைமை தொடர்கின்றது. நம் முஸ்லிம் தலைவர்களுக்குரியவைகளை  அவர்கள் பெற்றுள்ளதை தவிர நமது முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் இது வரை நிறைவேற்றப்படாத நிலமை தொடர்கிறது. இந்த நிலமை குறித்து நமது முஸ்லிம் சமூகம் வேதனை அடைந்த நிலமையில் உள்ளது.

நல்லாட்சி அரசினை பயன்படுத்தி தமிழ் தலைவர்கள் தங்களின் சமூக நலன்களை ஒப்பந்தற்களாக முன்வைத்து முடிந்தளவு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்வு கண்டு வருகின்றனர்.

அன்மையில் பிரதமருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனையை தமிழ் தலைவர்கள் நன்கு திட்டமிட்டு தமிழ் சமூகம் சார்பான 18 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நம்பிக்கையில்லா பிரேரனைக்கு எதிராக வாக்களித்தனர். அதனால்  இந்த ஒப்பந்தங்களில் 12 கோரிக்கைகள் இதுவரைக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் முஸ்லிம் தலைவர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனைக்கு எதிராக வாக்களித்து தங்களுக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு முஸ்லிம் சமூகத்தைக் காட்டி கொடுத்தாக சிங்கள கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்ற நிலமை உருவாகியுள்ளது.

வட கிழக்கில் அதிகாரம் கோரி ஆயுத போராட்டம் நடைபெற்றமைக்கு சிறுபான்மை மக்களுக்கு தற்காலிகமான முறையில் வழங்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு கையளித்து கொடுப்பதற்கான முயற்சிகளுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியமை குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் கவலைப்பட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

உரிய காலம் முடிந்தவுடன் மாகாண சபை தேர்தல் நடாத்துவதற்கு  தீர்மாணம் மேற்கொள்ளாமல் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு 'வெற்றுப் பேப்பர்' ஒன்றை காட்டி கிழக்கு மாகாண சபையில் மடித்துக்கட்டிக் கொண்டு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தற்போது ஆளுனர் ஆட்சி தொடர்பாகவும், மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோறி தங்களின் இரட்டை வேடத்தை கிழக்கு மக்களுக்கு காட்டி வருகின்றனர்.

பெரும்பான்மை கட்சிகளின் பொறி முறைக்குள் அகப்பட்டுள்ள நமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்  முஸ்லிம் மக்களின் அரசியல் நலன்களில் அக்கரை காட்டாது செயல் படுவது குறித்து நமது நாட்டில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.  பெரும்பான்மை கட்சிகள் தற்போதய அரசியல் நிலமையை பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் பேரம் பேசும் சக்திகளை இல்லாமல் செய்வதற்கான வேலைத் திட்டங்களை முஸ்லிம் தலைவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம். ஜஃபர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்பாளர்கள், கொள்கை பரப்புச்செயலாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள், மகளிர் அமைப்பாளர்களும், ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள முறையினை மாகாண சபை முறையை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் புதிய மாகாண சபை முறையை கொண்டு வந்து  முஸ்லிம், தமிழ் அரசியல் பிரதிநிதிகள்  இணைந்து பழைய முறையினை தேர்தல் முறைமையாக்கி பாராளுமன்றத்தில் அங்கிகாரத்தினை பெற வேண்டிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் புதிய முறையிலான மாகாண சபை முறையை சிறுபான்மை பிரதிநிதிகள் ஆதரித்தன் ஊடாக  தங்களின் தலைகளில் நெருப்பு கொள்ளியை அள்ளிப்போட்ட நிலமைகளில் உள்ளனர்.

எம்.ஜே.எம்.சஜீத்
Madawala

0 comments:

Post a Comment