Tuesday, June 26, 2018

பிரபாகரன் ரணிலை ' தந்திரி நரி ' என்று கூறினார் ! அதன் அர்த்தம் இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது -ஞானசார தேரர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை "தந்திர நரி " என்று குறிப்பிட்டமை முற்றிலும் உண்மையாகவே காணப்படுகின்றது . நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்மையினை இவரே தோற்றுவிக்கின்றார் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது . நாட்டு மக்கள் மஹிந்தவையும் நம்ப வேண்டாம் மைத்திரியையும் நம்ப வேண்டாம். சிறந்த அரசியல் தலைவரை சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் பௌத்த மதத்தினர் ஒற்றுமையாக செயற்பட்டால் பிற மதங்களும் பாதுகாக்கப்படும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

இன்று நாட்டு மக்கள் அரசியலில் ஏமாற்றப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். பொய்யான வாக்குறுதிகளின் காரணமாக தமது ஜனநாயக உரிமையினை இழந்து விரக்தியுற்றவர்களாக காணப்படுகின்றனர். கடந்த கால அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி பல வாக்குறுதிகளை முன் னிலைப்படுத்தி தேசிய அரசாங்கம் மக்கள் மத்தியில் வாக்குகளை பெறும் நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டது. ஆனால் இன்றுவரை நாட்டில் தேசிய நல்லிணக்கமும் இனவொற்றுமையும் எவ்விதத்திலும் முன்னேற்றமடையவில்லை.

தற்போது தேசிய அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி கடந்த கால அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நோக்கி பயணித்து வருகின்றது.. இரண்டு தரப்பினரும் ஒருவரை பார்த்து பிறிதொருவர் குறை கூற அரசியலை கேலிக் கூத்தாக்கிவிடுகின்றனர்..இரண்டு அரசாங்கமும் தங்களின் குறைகளையும் சுய தேவைகளை மாத்திரம் கருத்திற் கொண்டு அரசியலை களமாக பயன்படுத்திக் கொண்டு செயற்படுகின்றது.

கடந்த கால அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு பொதுபல சேனா அமைப்பின் ஆதரவே பிரதான காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் தற்போது குறை கூறுகின்றனர். மக்களின் அரசியல் உரிமையினையும் செல்வாக்கினையும் விலை கொடுத்து வாங்க முடியாது. மஹிந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மக்களின் அபிமானத்தினையும் வென்றவராக காணப்பட்டிருந்தால் அவர் வெற்றிப் பெற்றிருப்பார். ஆனால் அவரும் அரசியல் தொடர்பில் பல தவறுகளை விட்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தந்திர நரி என்று குறிப்பிட்டமையின் அர்த்தம் தற்போது உண்மையாக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கு புரிந்த விடயம் தற்போதே எமக்கு புரிந்துள்ளது. அரசியலில் இடம் பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் மிக தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார் .

நாட்டின் தலைவர் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக காணப்படுகின்றது. ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும் கடந்த அரசாங்கமும் சரி தேசிய அரசாங்கமும் நிறைவேற்றவில்லை. ஆகவே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களது வாக்குகளை கடந்த அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டாம் தேசிய அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டாம் . மக்களுக்காக செயற்படும் இரண்டு தரப்பிணருக்கும் தொடர்பற்ற தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இன்முறையும் தொடர வேண்டாம். என தெரிவித்தார்.

Battinews

0 comments:

Post a Comment