Saturday, June 30, 2018

நாஸா உட்பட அமெரிக்காவின் ஆய்வு நிலையங்களில் பணியாற்றும் ஹெம்மாதகமை விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம்.


  June 30, 2018

நாஸா வில் பணிபுரிந்த ஹெம்மாதகமை மண் ஈன்றெடுத்த சான்றோர்கள் அறிஞர்கள், அறிவியல்
உலகில் தடம்பதித்தவர்கள் வரிசையில் ஹெம்மாதகமயை பிறப்பிடமாக கொண்ட நவாஸ் இப்ராஹிம் அவர்கள் பள்ளிபோர்வை முஸ்லிம் வித்தியாலயம், அல் அஸ்ஹர் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக்கல்லூரிகளின் பழைய மாணவராவார்.

1984ம் ஆண்டு சாதரணர தரத்தில் அல் அஸ்ஹர்  கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர் தரம் கற்பதற்காக கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கணிதத்துறையை  தேரந்தெடுத்த அவர்கள்  சிறந்த பெறுபேறுகளை பெற்று பேரதனை பழ்கலை கலகத்தில் இரசாயனவியலில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.

நான்கு வருட இரசாயனவியல் பாட நெறியை வெற்றிகரமாக முடித்த அவர், தொடர்ந்து Msc கற்கையில் பழ்கலைகழககத்தின் முதல் தர பெறுபேறுகளை பெற்று பல்கலை போற்றும் சிறந்த மாணவனாக தேர்நதெடுக்கப் பட்டதோடு, சுமார் நான்கு வருடங்கள் பல்கலைகழக விரிவுரையாளராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இவர் தனது முதலாவது கண்டு பிடிப்பை அறிமுகப்படுத்தினார். வைக்கோல் சக்தியின் மூலம் ஜெனறேட்டர் ஒன்றை இயக்கி தனது புதுகண்டுபிடிப்பு துறையில் தடம் பதித்தார்.

நான்குவருடம் முதல்தர விரிவுரையாளராக கடயைாற்றிய பின்னர், தனது  கலாநிதி படிப்பிற்காக ஐக்கிய அமெரிக்கா பல்கலைகழகத்திற்கு புலமை பரிசில் பெற்று சென்றார். அங்கு ஆயவுகளை மேற்கொண்டு கலாநிதியாகவும் விஞ்ஞானியாகவும் உயர்ந்தார்.

பலவேறு ஆய்வுகள் செய்து பல புதிய விடயங்களை கண்டு பிடித்து அமெரிக்காவிின் சிரேஷ்ட  விஞ்ஞானிகளில் ஒருவரானார்.

ஒரு வருடம் நாசா மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி நவாஸ் அவர்கள், வின்வெளி ஆராயச்சியாளர்களுக்கான  பெரும்  இரத்தப்பரிசோதனைகூட  இயந்திரங்களை மாற்றியமைத்து கிரடிட் காட் அளவினாலான இரத்தப்பரிசோதனை இயந்திரத்தை கண்டு பிடித்ததன் மூலம் நாசாவிலும் தனது பங்களிப்பை செலுத்தினார்.

தற்போது அமெரிக்காவின் பிரபல மருத்துவ ஆய்வு நிலையமொன்றில் ஐம்பது விஞ்ஞானிகளுக்கு  தலைமை விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.

இரசாயனவியல் விஞ்ஞானியான நவாஸ் இப்ராஹம் அவர்கள் அதனை பகுப்பாய்வதோடு அதனை பிரித்தரிவதன் மூலம் புதிய இரசாயனவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளை கண்டறியும் ஆய்வுகளை மேற் கொண்டு மனித குலத்தின் வாழ்விற்கான ஆராய்ச்சிகளை செயது வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

தமது விஞ்ஞானிகள் குழுவின் மூலம் புற்று நோய் மற்றும் நீரிழவு நோய்களுக்கான புதிய ஆய்வில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். வாரம்தோறும் வழங்க வேண்டிய மருத்துவத்தை ஆறு மாதம் ஒருவருடம் என நீடித்த காலம் பயன் படும் மருத்துவ ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார்.

அளப்பரிய கண்டு பிடிப்புகளை மனித குலத்து்கு வழங்கிய நவாஸ் இப்ராஹீம் பற்றி சில வார்த்தைகள் கூறவது இவ்விடத்தில் பொறுத்தம் என்று கருதுகிறேன்.

ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இளையவரான இவர் குக்கிராமமொன்றில் எளிமைமிகு குடும்பத்தில் பிறந்து கல்வி கற்காத உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பாலும் உதவியாலும் உயர்ந்தவர் என்பது எமக்கெல்லாம் ஓர் முன்மாதிரியாகும்.

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையில்லை என்பது இவர் ஒரு நடமாடும் சாடசி.

உலகின் உன்னத நாகரீகமும் அறிவியலும் நிறைந்த நாட்டில் ஒரு சிரேஷ்ட விஞ்ஞானியாக திகழ்வதற்கு அவர் கொண்ட இலக்கும் அதில் காட்டிய உறுதியும் முன்மாதிரி மிக்கது.

குறுகிய விடுமுறை ஒன்றில் இலங்கை வந்துள்ள விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம் வேலைப்பழுக்கலலுக்களுக்கு மத்தியிலும் தான் ஆரம்பக்கல்வி பெற்ற பள்ளிபோருவை முஸ்லிம் வித்தியாலத்தில்  மாணவர்களுடனும்  தான் கற்ற ஆசிரியர்ளுடனும் ஒரு கலந்துரையாடலில் ஈடு பட்டார்

மேலும் அல் அஸ்ஹர் கல்லூரியில்  OBA, SDC யுடனான சந்திப்பும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வொன்றும் நடைபெற்றது.

ஹெம்மாதகமை மண்ணுக்கும் இலங்கைதிருநாட்டிற்கும் தான் கற்ற கல்லூரிக்கும் பெருமைகள் ஈட்டித்தந்ததுடன் மனித குல ஆரோக்கியவாழ்வுக்கு தன்னை அர்ப்ணித்து முழு மனிதசமூகதிற்கும் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற சிரேஷ்ட விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம் மேலும் மேலும் வளர  உளமார வாழ்த்துகிறோம்.

மேலும் அண்மையில் நீதிபதியாக பணியற்ற ராபி ஹனீபா அவர்களது தாய் மாமனாரே விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம் அவர்கள்.

நன்றி

- BY: நியாஸ் சாலி -

0 comments:

Post a Comment