Tuesday, June 26, 2018

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு


இன்றைய தினம் சேவைக்கு திரும்பாத சகல பேரூந்து சாரதிகளினதும் நடத்துநர்களினதும் அனுமதி பத்திரம், நாளை மறுதினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சேவையாளர்கள் தமது பணிநிறுத்தத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புமாறும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்ர தென்மாகாண நெடுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து பணியாளர்களிடம் கோரியுள்ளார்.

இதற்கிடையில், தென்மாகாணத்தில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் ஐந்து அரச பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாங்கொடை மற்றும் காலிக்கு இடையிலான பகுதிகளில் நேற்று இரவு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஒன்றின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பணிநிறுத்த போராட்டத்தால் இன்றைய தினமும் கொழும்பு வரும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

குறுந்தூர தரிப்புகளில் தமது பேரூந்துகளை நிறுத்தி பிரயாணிகள் ஏற்றுவதை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்து பணியாளர்கள் நேற்று முதல் இந்த பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment